லெக்சஸ் நிறுவனம், இஎஸ்500 இ என்ற காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 74.69 கிலோவாட் அவர் பேட்டரி மற்றும் டூயல் மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 343 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். முழுமையாக சார்ஜ் செய்தால் 444 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். 11 கிலோவாட் அவர் சார்ஜர் ஸ்டார்டர்டு அம்சமாக வழங்கப்படும். 14 அங்குல இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே, 12.3 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, எல்இடி லைட்டுகள், மார்க் லெவின்சன் ஆடியோ சிஸ்டம், ஹெட் அப் டிஸ்பிளே, பனோரமிக் கிளாஸ் ரூப், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், 10 ஏர்பேக்குகள் உட்பட பல அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.89.99 லட்சம்.
+


