Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஜய் முதலில் பரீட்சை எழுதட்டும் பாஸ் பண்றாரான்னு பார்ப்போம்: ஆர்.பி.உதயகுமார் கிண்டல்

மானாமதுரை: தேர்தல் களத்திலேயே விஜய் இல்லை, அவருக்கு அனுபவம் போதாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறினார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அவர் கூறியதாவது:

விஜய் முதலில் பரீட்சை எழுதட்டும். மக்கள் என்ன மதிப்பெண் கொடுக்கிறார்கள், அவர் பாஸ் பண்ணுகிறாரா என பார்த்துவிட்டுதான் அவரை விமர்சனம் செய்ய முடியும். விஜய்க்கு அனுபவம் போதாது. 41 தொண்டர்கள் இறந்துள்ளனர். ஒவ்வொரு கூட்டத்திலும் உயிர்கள் பலியாகிறது. ஆனால் யார் இறந்தாலும் பரவாயில்லை. தான்தான் முதலமைச்சர் என்று விஜய் பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். விஜய் களத்தில் இல்லாமலேயே இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார். காலமும், மக்களும் அதற்கு தீர்ப்பு வழங்குவார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை. இவ்வாறு கூறினார்.