தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து தாராபுரம் அடுத்த சத்திரம் கிராமத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக இருந்த இந்த பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர் கார்த்திகா மட்டும் பிரசாரம் செய்தார். இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தலைவர் சீமான் கால் வலியால் ஓய்வில் இருக்கிறார். அதனால் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என கூறினர்.

