Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலைத்தலைவர் உருட்டிவிட்ட குண்டு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நாட்டாண்மை வருகையால் யூனியன் மலராத கட்சிப் பிரதிநிதிகள் அச்சத்தில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரியில் மலராத கட்சியில் கோஷ்டி ‘யூனியன்’ உள்ளதாம்.. இதனால் ஆட்சியை முழுமையாக்க முடியாமல் திணறிய புல்லட்சாமி, பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளாராம்.. இதனால் ஆடிப்போன உள்ளூர் தாமரைகள் பவர்புல் மேலிடத்தில் பிரச்னை பூதாகரமாவதாக முறையிட நாட்டாண்மை அனுப்புவதாக உறுதி தரப்பட்டுள்ளதாம்..

இப்பஞ்சாயத்தில் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுண்ணு தீர்ப்பு இருக்கும் வகையில் பார்வையாளர் வருகை இருக்கலாம் என்ற தகவலால் மலராத கட்சி பிரதிநிதிகளிடம் அச்சம் நிலவுகிறதாம்.. ஏற்கனவே மாற்று அணியில் சேர்ந்து பரிசுகளை வெளிப்படையாக பெற்ற பிரதிநிதிகள் கட்சியிலிருந்து தூக்கி எறியப்படலாம் என்பதால் யூனியன் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு இருக்காம்.. இதுபற்றிதான் பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சென்ட்ரல தம்பியும், ஸ்டேட்ல அண்ணனும் பார்த்துக்கொள்வாங்க என்பதுதான் இலை கட்சியில் வைரலாகும் கோஷமாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘புரம் மாவட்டத்தில் இலை கட்சி மாஜி அமைச்சர் தனது சகோதரரை முழுநேர அரசியல் களத்திற்கு கொண்டு வந்திருக்கிறாராம்.. ஏற்கனவே கட்சி தொலைக்காட்சி நிர்வாகத்தை கவனிக்கும் அவர் தனது இல்ல திருமணத்தில் இபிஎஸ் பங்கேற்றபோது, முழுநேர அரசியல் களத்திற்கு தனது சகோதரை களமிறக்கும் தகவலை காதில் போட்டாராம்.. இதனால் தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே வந்து தலைகாட்டிய சகோதரரை இனிமேல் முழுநேர அரசியலில் பார்க்க முடியுமாம்.. புரம், மயில் தொகுதியில் ஏதாவது ஒன்றில் போட்டியிடும் முடிவில் உள்ளாராம்..

இதற்காகவே இபிஎஸ் உட்கார்ந்த இருக்கைக்கு அருகிலேயே சகோதரரின் கையை பிடித்து அமர வைத்து மாஸ் காட்டினாராம் ராஜ்ய சபா ஆனவர். இந்த வீடியோவை தற்போது பரப்பும் கட்சியினர் இது அண்ணன், தம்பியின் பாசமழை என கூறி வருகிறார்களாம்.. ஏற்கனவே ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் பொறுப்பை மாஜி வைத்திருக்கும் நிலையில் தம்பி சென்ட்ரலுக்கு போயிடுவாரு. அண்ணனோ ஸ்டேட்ட பார்த்துக்கவாருன்னு சொந்தக் கட்சியினரே கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்களாம்.. சிலர் இப்போதே சீட்டுக்காக போர்க்கொடி எழுப்பி இருக்கிறார்களாம்.

இலை வட்டாரத்தில் இந்த டாப்பிக்தான் பரவலாக ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒரே தொகுதியை குறி வெச்சி சீட்டு வாங்க இப்பவே போட்டி தொடங்கிடுச்சாமே எங்கே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘2026ல் சட்டமன்றத்தோட எலக்‌ஷன் வரபோகுது.. இதனால எலக்ஷன் கமிஷனும் தங்களோட பணிகளை தொடங்கிட்டாங்க.. வெயிலூர் மாவட்டம் குடியேற்றம் தனி தொகுதி சீட்டுக்கு போட்டி நடக்குதாம்.. இங்க போட்டி போட, தலித் கட்சி தலைவர்களில் ஒருவரும் பெயர்ல தமிழையும், அரசையும் வெச்சிருக்குறவரு தயாராகிட்டாராம்..

என்னதான் சென்னையில செட்டில் ஆகிவிட்டாலும், சொந்த ஊரான குடியேற்றம் ெதாகுதியில இலை கட்சியில சீட் வாங்கிடலாம்னு வேலை பார்த்து வர்றாராம்.. இது இப்படியிருக்க ரெண்டு எழுத்து இனிஷியல் தொகுதியில வெற்றி பெற்றவரு, குடியேற்றம் தொகுதியை இந்த முறை பெற்றிடலாம்னு, வீரமான மாஜி மந்திரியை சந்திக்க தொடங்கிட்டாராம்.. அதோட, சென்ட்ரல்ல ஷாவுடன் நெருக்காம இருக்குறவரும், பெயர்ல பாண்டியனை வெச்சிருக்குற நெல்லைக்காரரு அந்த தொகுதியில போட்டி போட ஆதரவாளர்கள் மூலமாக ெதாகுதியை அலசி ஆராய்ந்து வர்றதாக சொல்றாங்க..

தனி தொகுதி என்பதால, தலித் தலைவர்கள் குடியேற்ற தொகுதியை குறி வெச்சி காய் நகர்த்தி வர்றாங்களாம்.. அதோட உள்ளூர் இலை பார்ட்டிகள், கடந்த முறை தோல்வி அடைந்த கஸ்பாக்காரர், தா என்று முடியுற 3 எழுத்து பெண்மணி, பெயர்ல சாமி வெச்சிருக்குற வழக்கறிஞரு, 2 எழுத்து இனிஷியல் கொண்டவருன்னு தினமும் இலை பார்ட்டி தலைமை ஆபீஸ்ல சீட்டுக்காக மனு அளிச்சு வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘என்றாவது ஒருநாள் பதவி கிடைக்கும் என இலவு காத்த கிளியாக இருக்கும் சிவந்தமலைக்கு ஷாக் கொடுத்துட்டாராமே இலைக்கட்சி தலைவர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவர் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற காலக்கட்டத்தில் அவரது செயல்பாடுகள் பிடிக்கலன்னு குக்கர்காரரின் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்கள் கவர்னரை சந்திச்சு மனு கொடுத்தாங்க.. இதனால ஷாக்கான இலைக்கட்சி தலைவரோ சபாநாயகர் மூலமாக அவர்களின் பதவியை பறிச்சதோடு மட்டுமல்லாமல் ஆட்சியை காப்பாத்திட்டாரு..

அதே நேரத்தில் தேனிக்காரரின் தலைமையிலான 10 எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை மதிக்காமல் ஓட்டுப்போடாம உட்கார்ந்துட்டாங்க.. அவர்களில் முக்கியமானவர்களில் சிவந்தமலையும் ஒருவராம்.. மேட்டூர் தொகுதியின் பிரதிநிதியான அவருக்கும் இலைக்கட்சி தலைவருக்கும் எப்போதுமே ஒத்துவராதாம்.. இதற்கொரு காரணமும் சொல்றாங்க.. தேர்தலின்போது சிவந்தமலைக்கு சீட் ஒதுக்கலையாம்.. மேலிடம் வரை சென்று போராடித்தான் சீட்டே கிடைச்சதாம்.. இதனால கூவத்தூரில் இருந்து வெளியேறி, என் தொகுதி மக்களிடம் கருத்துகளை கேட்டுக்கிட்டு வாறேன்னு கேட்டை தள்ளிக்கிட்டு வெளியே வந்துட்டாராம்..

இதனால கூவத்தூரில் வழங்கப்பட்ட தங்கம், துட்டு எதுவுமே கிடைக்கலையாம்.. அதே நேரத்தில் தொகுதி அதிகாரிகளும் அவரை கண்டுக்கிடலையாம்.. இப்படியே போய்கிட்டிருந்த காலக்கட்டத்தில் எல்லோரும் ஒன்றிணைந்திட்டாங்களாம்.. ஆனால் அந்த சிவந்தமலையோ, தேனிக்காரரிடம் இருந்து இடம்பெயர்ந்து இலைக்கட்சி தலைவரோடு சேர்ந்திட்டாராம்.. இனிமேல் தேர்தலை சந்தித்து எம்எல்ஏவோ, எம்.பி.,யாகவோ ஆகமுடியாது.

மேல்சபை எம்பி பதவி கொடுத்தால் சிறப்பாக வேலை செய்வேன் என இலைக்கட்சி தலைவர் காதுபடவே கேட்டாராம்.. இலைக்கட்சி தலைவரை பொறுத்த வரையில் தம்மை யார் எதிர்க்கிறார்களோ அவர்களை கைக்குள் வைத்துக்கொள்வாரே தவிர, எந்த பொறுப்புகளையும் கடைசிவரை வழங்கவே மாட்டார் என அவருக்கு நெருக்கமானவங்க சொல்றாங்க.. ஆனால் அந்த சிவந்தமலையோ என்றாவது ஒருநாள் பதவி கிடைக்கும் என இலவு காத்த கிளியாகவே இருக்காராம்..

இந்நிலையில் இலைக்கட்சி தலைவர் அவரது சொந்த ஊரில் கோபிச்செட்டிப்பாளையத்துக்காரரை நீக்கியது ஏன் என விளக்கிக்கிட்டிருந்த நேரத்தில், எனது ஆட்சியை கவிழ்க்க தேனிக்காரருடன் இருந்த 10 எம்எல்ஏக்கள் எதிர்த்து ஓட்டுப்போட்டாங்கன்னு ஒரு குண்டை உருட்டி விட்டிருக்காரு. இதனை கொஞ்சமும் எதிர்பாராத சிவந்தமலைக்காரர் தலையை தொங்கப்போட்டு கிட்டே இருந்தாராம்.. இதனை பார்த்த அவரது ஆதரவாளர்கள் ரொம்பவே சோகமாகிட்டாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.