Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டம் படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை

பணி: ஜேஏஜி என்ட்ரி ஸ்கீம் (124வது). மொத்த காலியிடங்கள்: 8.

வயது வரம்பு: 01.07.2026 தேதியின்படி 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: குறைந்தது 55% மதிப்பெண்களுடன் எல்எல்பி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த 5 வருட சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் முதுநிலை சட்டப்படிப்புக்கான (எல்எல்எம்)- கிளாட்- 2026 நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப் பணிக்கான நேர்முகத் தேர்வின் போது இளநிலை சட்டப்படிப்பு சான்றிதழ்களுடன் கிளாட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழையும் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள் 2.4 கி.மீ., தூரத்தை 10½ நிமிடங்களிலும், பெண்கள் 13 நிமிடங்களிலும் ஓடி முடிக்க வேண்டும். ராணுவத்தால் நடத்தப்படும் மருத்துவ தகுதி தேர்வு, சிட்அப்ஸ், புஷ்அப்ஸ் ஆகிய உடற்திறன் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

எஸ்எஸ்பி யால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, மருத்துவத் தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பெங்களூரு, போபால், ஜலந்தர் ஆகிய மையங்களில் தேர்வு நடத்தப்படும். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு இ.மெயில்/எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கப்படும். பின்னர் 6 மாத காலம் இந்திய ராணுவ சட்டப்பிரிவில் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி அக்டோபர் 2026ல் தொடங்கும். பின்னர் ராணுவத்தில் வழக்கறிஞராக பணியமர்த்தப்படுவர். பயிற்சியின் போது மாதம் ரூ.56,100 உதவித் தொகையாக வழங்கப்படும். பின்னர் லெப்டினென்ட் பணியுடன் மாதம் ரூ.56,100- 1,77,500 சம்பளம் வழங்கப்படும்.

www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.02.2026.