கழிவு நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண 946 கோடியில் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது: அமைச்சர் கே.என்.நேரு
சென்னை: கழிவு நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண 946 கோடியில் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 11 கழிவு நீர் அகற்றும் நிலையம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. வடசென்னை பகுதியில் கழிவுநீர் குழாய்கள் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானதாக உள்ளதால் அதனை மாற்றும் பணி வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும் என ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் நேரு பதிலளித்தார்.


