சென்னை: வேளச்சேரி -பரங்கிமலை இடையே ஜூன் மாதம் முதல் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 2008ல் ரூ.495 கோடியில் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை 5 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. 4.5 கி.மீ. தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் திட்டம் தாமதமானது. நீதிமன்றம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதை அடுத்து பறக்கும் ரயில் பாலப் பணிகள் 70% நிறைவடைந்துள்ளன
+
Advertisement


