உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை செய்து தர உத்தரவிட்டுள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
நீலகிரி: உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை செய்து தர உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை செய்து தர உத்தரவிட்டுள்ளேன். புதிதாக திறக்கப்பட்ட உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என முதல்வர் கூறினார்.

