டிஎன்பிஎஸ்சி தேர்வை உடனடியாக நடத்தி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வை உடனடியாக நடத்தி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளது; "காலியாக உள்ள அரசு பணியிடத்தை நிரப்பாமல், ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதா?. தலைமைச் செயலகத்திலும் பலர் ஓய்வுபெற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வை உடனடியாக நடத்தி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும். லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. எப்போது நடவடிக்கை எடுக்கும்?" என தெரிவித்துள்ளார்.

