திருவள்ளூர்: தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியான எளாவூர் சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. காரில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸாவை சேர்ந்த சந்தோஷ் நாய்க், கேரளாவை சேர்ந்த மித்தில்லா, கும்பகோணத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆய்வாளர் ராம்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
+
Advertisement

