தஞ்சை: தஞ்சையில் பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களின் பெற்றோர்களுடன் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதிராம்பட்டினம் பிரைம் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் 19 பேர்
பொதுத்தேர்வு எழுத முடியாத நிலை உருவாகி உள்ளது. பிரைம் தனியார் பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை. 19 மாணவர்களும் நாளை 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியாது என்பது உறுதியாகி உள்ளதால் பெற்றோர்கள் வேதனை அடைந்துள்ளனர்.


