Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயிலில் ஒருகால பூஜையாவது நடத்தப்பட வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: கோயிலில் தினமும் ஒருகால பூஜையாவது நடத்தப்பட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் வேண்டுதல்களுக்காக பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் அலங்கியம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான திண்டீஸ்வரர், வீரராகவ விநாயகர் கோயில் உள்ளது. கோயிலில் பூஜை எதுவும் நடத்தப்படாமல் பல ஆண்டுகளாக மூடிக்கிடப்பதாக ஐகோர்ட்டில் பாலகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.