அரசு விரைவுப் பேருந்துகளில் கோடை காலத்தில் பயணித்தால் குலுக்கல் முறையில் 20 முறை வரை இலவச பயணப் பரிசு
சென்னை : அரசு விரைவுப் பேருந்துகளில் கோடை காலத்தில் பயணித்தால் குலுக்கல் முறையில் 20 முறை வரை இலவச பயணப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் ஒன்று முதல் ஜூன் 15 வரை பயணிப்பவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் பரிசாக 25 பேர் ஓராண்டுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் 20 முறை முன்பதிவு செய்து இலவசமாக பயணிக்கலாம். 2ம் பரிசாக 25 பேர் 10 முறையும், 3ம் பரிசாக 25 பேர் 5 முறையும் இலவசமாக பயணிக்கும் பரிசை வெல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


