சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் மழை நீர் எங்கும் தேங்கவில்லை; ஒரு சில இடங்களில் தேங்கிய நீரும் மழை நின்றால் வடிந்துவிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் இன்னும் மழை நிற்கவில்லை, நின்றால் அனைத்து இடங்களிலும் வெள்ளம் வடிந்துவிடும். வானிலை மையம் தரும் தகவல் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது.
Advertisement

