சென்னை: தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசுக்கு ஒ.பன்னீர்செல்வம் திடீரென கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு 2024-25ம் ஆண்டுக்கான கல்விநிதி ரூ.2151 கோடியை ஒன்றிய அரசு உடனே ஒதுக்க வேண்டும். கல்வி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகளில் தூய்மைப்பணி உள்ளிட்ட பணிகள் முடங்கியுள்ளன என ஒ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.