சென்னை: வளசரவாக்கத்தில் 6 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு தெருநாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தந்தையுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை பக்கத்து வீட்டில் வளர்க்கும் தெருநாய் கடித்து குதறியது. சிறுவனுக்கு காது, கை, முகம் என பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின் பெற்றோர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

