சென்னை: தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 2025 மே மாதம் மட்டும் திட்டத்தில் 7,74,493 பேர் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 6.64 லட்சம் பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்தது அதிகபட்சமாக இருந்தது. கடைசி நேர நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.www.tnstc.in, TNSTC மொபைல் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
Advertisement


