மக்களை சந்தித்தால்தான் எனக்கு உற்சாகம் வரும்; நோய் ஏதாவது இருந்தாலும் நன்றாகிவிடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; மருத்துவமனையில் இருந்தபோதும் அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்திக்கொண்டதான் இருந்தேன். தூத்துக்குடிக்கு வந்த பிரதமரிடம் தமிழ்நாடு மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அனுப்பி வைத்தேன். ஆகஸ்ட் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி வரை நடைபெறும் முகாமில் 17 மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளன. மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் பணியாற்றுவதே என் விருப்பம். மக்களை சந்தித்தால்தான் எனக்கு உற்சாகம் வரும்; நோய் ஏதாவது இருந்தாலும் நன்றாகிவிடும். கல்வி, மருத்துவம் ஆட்சியின் இரண்டு கண்கள். ஐ.நா. சபையே விருது கொடுத்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பாராட்டி இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.