Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சின்னமலையின் வீரமும், தியாகமும் நிலைத்திருக்கும் :துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை : சென்னிமலைக்கும் - சிவன்மலைக்கும் நடுவே ஒரு சின்னமலை என்று ஆங்கில ஆதிக்கத்தை குலை நடுங்கச் செய்தவர் தீரன் சின்னமலை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விடுதலைப்போரின் வீரமிகு அடையாளம் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் இன்று. சென்னிமலைக்கும் - சிவன்மலைக்கும் நடுவே ஒரு சின்னமலை என்று ஆங்கில ஆதிக்கத்தை குலை நடுங்கச் செய்தவர்.எதிரிகளால் இறுதிவரை நேரடியாக போரிட்டு வீழ்த்திட முடியாத தீரன் சின்னமலையின் வீரமும் - தியாகமும் என்றைக்கும் நிலைத்திருக்கும்.ஆதிக்கத்தையும் - அடிமைத்தனத்தையும் ஒழிப்பதற்கான உத்வேகத்தை தீரன் சின்னமலையின் வரலாற்றின் வழியே பெறுவோம்.வாழ்க அவர் புகழ்!"இவ்வாறு தெரிவித்தார்.