இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்திட கோரி முதலமைச்சர் கடிதம்.ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சர் கடிதம் எழுதினார்.
