டெல்லி: சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. சபாநாயகர் அப்பாவு பேசியதில் அவதூறு ஒன்றும் இல்லை என கூறி அப்பாவு-க்கு எதிரான வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறியதை அடுத்து அதிமுக வழக்கை வாபஸ் பெற்றது. வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில், மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
+
Advertisement


