ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அதிவேக விசைப்படகுகளை இயக்க தடை விதிக்க வேண்டும்: தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அதிவேக விசைப்படகுகளை குறிப்பிட்ட பகுதியில் இயக்க தடை விதிக்க தமிழ்நாடு அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடற்கரையில் சுமார் 350க்கும் மேற்பட்ட அரிய வகை கடல் ஆமைகள் ஜன. 2025க்குள் இறக்க வாய்ப்பு என வல்லுநர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது.


