சென்னை: நடிகர் வடிவேலுக்கு எதிராக அவதூறு பரப்ப கூடாது என்று சிங்கமுத்துவுக்கு சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. வடிவேலுக்கு எதிராக அவதூறு பரப்பமாட்டேன் என உத்தரவாத மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தன்னை பற்றி அவதூறாக சிங்கமுத்து பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு வழக்கு தொடந்தார். வழக்கு தாக்கல் செய்த பிறகும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பரப்புவதாக வடிவேலு தரப்பு வாதம் செய்துள்ளார்.
Advertisement


