காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது குமரி ஆனந்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கவுள்ளார். சங்கரய்யா, நல்லக்கண்ணு, கீ.வீரமணி ஆகியோரை தொடர்ந்து குமரி ஆனந்தனுக்கு தகைச்சால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


