தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக தொழிலதிபர்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து!!
சென்னை : தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக தொழிலதிபர்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில் அதிகார வரம்பு மீறல் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மணல் குவாரி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்ட சொத்து முடக்கத்தையும் நீக்கி ஐகோர்ட் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


