மார்ச் 1ம் தேதி நடைபெறவிருந்த சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கடும் எதிர்ப்பை அடுத்து நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது. மே மாதம் 19ம் தேதி பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், 3 மாத இறுதி காலத்திற்குள் நேரடி பணி நியமனம் இருக்கக் கூடாது என அரசின் விதி உள்ளது. தனக்கு ஆதரவான நபரை பதிவாளராக கொண்டுவர துணைவேந்தர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
+
Advertisement

