சேலம்: சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, அதே மார்க்கத்தில் இருந்து எதிர்மார்க்கத்திற்கு சட்டெனத் திரும்பிய மற்றொரு தனியார் பேருந்து மீது மோதிய பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக 50க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement


