Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்தியா வரலாறு படைத்துள்ளது.. சார்க் நாடுகளுக்காக இந்தியா செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்!!

டெல்லி: விண்வெளித்துறையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விண்வெளித்துறையில் இந்தியா நிகழ்த்திய சாதனைகள் குறித்து சர்வதேச விண்வெளி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; விண்வெளித்துறை இந்தியாவின் பயணம் மற்ற நாடுகளுடன் போட்டி போடுவதற்கு அல்ல. சார்க் நாடுகளுக்காக இந்தியா செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் விண்கலம் தரையிறங்கியது மகத்தான சாதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.