சென்னை: ரிதன்யா தற்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்க ரிதன்யா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவினாசியில் வரதட்சணை கொடுமையால் கடந்த வாரம் ரிதன்யா தற்கொலை செய்துகொண்டார். ரிதன்யா தற்கொலை தொடர்பாக அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி கைதுசெய்யப்பட்டனர். இருவரும் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமின் வழங்க ரிதன்யா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ரிதன்யாவின் மாமியாரை காவலில் எடுத்து விசாரிக்க ரிதன்யா குடும்பத்தினர் வலியுறுத்தினர். மேலும், திருப்பூர் நீதிமன்றத்தில் ரிதன்யா குடும்பத்தினர் இடையீட்டு மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
Advertisement
