சென்னை: அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் வலியுறுத்தி உள்ளார். மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதை தடுக்க வேண்டும். ஜெனரிக் மருந்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.


