சண்டிகர் : ஹரியானா மாநில பாஜக தலைவர் மோகன்லால் பட்டோலி மற்றும் பாடகர் ராக்கி மிட்டல் ஆகியோர் மீது கூட்டு பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் 2023ம் ஆண்டு ஓட்டலில் மது கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் என இளம்பெண் புகார் அளித்துள்ளார். டெல்லியை சேர்ந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பாஜக தலைவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசு வேலை பெற்றுத் தருவதாக பாஜக தலைவரும் இசை ஆல்பத்தில் நடிக்க வைப்பதாக பாடகரும் கூறியதாக இளம்பெண் குற்றம் சாட்டி உள்ளார்.
Advertisement
