Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்துள்ள செய்தி வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். ஒட்டுமொத்த நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது. அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகக் கூறாமல், அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் நடக்காது. அப்பாவி இந்தியர்கள் இதுபோன்று தங்கள் உயிரை இழக்க மாட்டார்கள். என்று கூறியுள்ளார்.