Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

புதுப்பிக்கப்பட்ட திருமயத்தில் திமுக அலுவலகம் திறப்பு: முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார்

திருமயம் ஜூலை 17: திருமயத்தில் புதுப்பிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அலுவலகம் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த கோப்புகள் நீர்க்கசிவு ஏற்பட்டு சேதம் அடைந்து வந்தது. அதே சமயம் எம்எல்ஏ அறை, அலுவலர்கள் அறை மற்றும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்து காணப்பட்டது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக திருமயம் எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதனிடையே கடந்த வாரம் பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் தற்போதைய திருமயம் தொகுதி எம்எல்ஏ ரகுபதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து திருமயம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் எம்எல்ஏ ரகுபதி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், சிதம்பரம், அடைக்கல மணி, முத்து, கணேசன், இளையராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, சரவணன், கலை மற்றும் இலக்கிய அணி மேகநாதன், பொறியாளர் அணி ராமசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சீமானூர் கணேசன், துரைராஜா, பாலசுப்பிரமணியன்,

இளைஞர் அணி அருண் சேகர், விவசாய அணி சிவகுமார், முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அரிமளம், திருமயம், பொன்னமராவதி ஒன்றிய திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.