புதுச்சேரியில் இன்று முதல் ஜூன் 1 வரை அரசுப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல் ஜூன் 1 வரை அரசுப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


