புதுச்சேரி: புதுச்சேரியில் முகாம்களாக செயல்படும் 17 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (05.12.2024) விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது, நேற்றைய தினம் 22 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நாளை 17 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை (நவ.5) வழக்கம்போல் இயங்கும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல், மழை காரணமாக 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் நாளை மீண்டும் திறக்கப்படும்.
+
Advertisement


