ஆதரவற்ற விதவை சான்று பெற துணையின்றி இருக்க வேண்டும் என்பதற்கு பிள்ளையின்றி இருக்க வேண்டும் என்று பொருளல்ல: அரசு விளக்கம்
சென்னை: ஆதரவற்ற விதவை சான்று பெற துணையின்றி இருக்க வேண்டும் என்பதற்கு பிள்ளையின்றி இருக்க வேண்டும் என்று பொருளல்ல. பிள்ளை இருந்தும் வாழ்வாதாரத்துகு எவ்வித அனுகூலமும் கிடைக்காமல் விதவை ஆதரவின்றி இருப்பது என்று பொருள் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கையை தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சுற்றிக்கை விடுத்துள்ளது.

