Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ரூ.19,000 கோடி டெண்டருக்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம்

சென்னை: வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ரூ.19,000 கோடி டெண்டருக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மின்வாரியம் அறிவிப்பை எதிர்த்து எஃபிகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெண்டரை தனி நீதிபதி ரத்து செய்திருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மின்வாரியம் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மின்வாரியத்தின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.