Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காவலர் சேமநல நிதி ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானிய கோரிக்கையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "திமுக ஆட்சியில் தமிழ்நாடு காவல் துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் காவலர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவலர்களுக்கு வார விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. காவலர் சேமநல நிதி ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது, "இவ்வாறு தெரிவித்தார்.