சென்னை: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னையின் 2-வது விமான நிலையம், காஞ்சிபுரம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி 5,000 ஏக்கரில் அமைகிறது. விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை அதிகாரிகள், டிட்கோ அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர்.
Advertisement
