திண்டுக்கல்: பழனி பஞ்சாமிர்தம் குறித்துவதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சார்ந்த பாஜக தொழிற் பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது கோயில் தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பழனி கோயிலுக்கு திண்டுக்கல் தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்குவதாக வலைத்தளங்களில் செல்வகுமார் தவறான தகவல் பரப்பி வந்தார். வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகிகள் செல்வகுமார், வினோஜ் பி செல்வம் மீது கோயில் நிர்வாகம் புகார் அளித்தது.
Advertisement


