சட்டவிரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்த 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி செலுத்த நெல்லை ஆட்சியர் நோட்டீஸ்
நெல்லை: சட்டவிரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்த 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி செலுத்த நெல்லை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தாது மணல் எடுக்கும் வி.வி.மினரல்ஸ் மட்டும் அரசுக்கு ராயல்டி மற்றும் கனிமவள கட்டணமாக ரூ.2,195 கோடி செலுத்த நெல்லை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மட்டும் 2002 முதல் 2014 வரை நெல்லை மாவட்டத்தில் 2 லட்சம் டன் கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


