Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நீட் தேர்வு மறுதேர்வு நடத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி

சென்னை: நீட் தேர்வு மறுதேர்வு நடத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. மின் தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்பாடாததால் மறுதேர்வு நடத்த முடியாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 4ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. சென்னையில் பெய்த மழையால் மின்தடை ஏற்பட்டு சரியாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி வழக்கு தொடரப்பட்டது. ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு அதுவரை நீட் முடிவுகளை வெளியிட கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டது. மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறுதேர்வு நடத்த இயலாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.