நாக்பூர் வன்முறைக்கு காரணம் என கூறப்படும் ஷாவா திரைப்படம் நாடாளுமன்றத்தில் திரையிடப்பட உள்ளதாக தகவல்
டெல்லி: நாக்பூர் வன்முறைக்கு காரணம் என கூறப்படும் ஷாவா திரைப்படம் நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் வரும் 27-ம் தேதி ஷாவா திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒளரங்கசீப்பை கொடுங்கோலனாக சித்தரிக்கும் ஷாவா திரைப்படம் சிறப்புக் காட்சியாக திரையிடப்படவுள்ளது. பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் ஷாவா திரைப்படத்தை காண உள்ளனர்.


