சென்னை: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 10 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளது. கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை அபகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இருவரையும் செப்.12 வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.மகேஷ் உத்தரவு அளித்துள்ளார். சேகர், செல்வராஜிடம் 3 மணி நேரத்துக்கு மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
Advertisement


