மயிலாடுதுறையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வெளியான செய்திக்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய அபிநாத் என்பவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமி, அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை மகளிர் போலீசார் அபிநாத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியது தெரிய வந்ததை அடுத்து அபிநாத் கைது செய்யப்பட்டார். விசாரணை காலத்தில் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என மயிலாடுதுறை எஸ்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Advertisement
