மணிப்பூர்: மணிப்பூரில் கூடுதல் எஸ்.பி. கடத்தப்பட்டதைக் கண்டித்து போலீஸ் கமாண்டோக்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு இம்பால் மாவட்ட கூடுதல் எஸ்.பி. மொய்ரங்தெம் வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மெய்தி தீவிரவாதிகள் 200 பேர் கூடுதல் எஸ்.பி. வீட்டைத் தாக்கி மொய்ரங்தெம் அமித்தையும் காவலர் ஒருவரும் கடத்தினர். பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கி, கூடுதல் எஸ்.பி. காவலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கூடுதல் எஸ்.பி. கடத்தலை கண்டித்தும் தீவிரவாதிகளுக்கு மக்கள் ஆதரவாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தினர்.
Advertisement

