Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வீரமும் புகழும் வாழ்க!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வீரமும் புகழும் வாழ்க என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய ஒப்பற்ற வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாள் இன்று. அந்நியர் ஆதிக்க எதிர்ப்புணர்வு இன்று வரை நம் தமிழ் மண்ணில் தீவிரமாக விளங்குகிறது. ஆங்கிலேயருக்கு எதிரான தம் போரால் அதற்கு வித்திட்ட வீரர்தான் சின்னமலை என முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.