சிங்கப்பூர்: லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் மேகக் கூட்டத்தை கடந்து சென்றபோது பெரும் அதிர்வு ஏற்பட்டது. மேகக் கூட்டங்கள் உரசி விமானம் குலுங்கியதால் பயணிகள் இருக்கையில் இருந்து சரிந்தனர். பெரும் அதிர்வுடன் குலுங்கியதால் விமானத்தில் இருந்த பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர். மேகக் கூட்டத்தில் விமானம் உரசியதை அடுத்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தரையிறக்கப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு பாங்காக்கில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுவதாக சிங்கப்பூர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
Advertisement


