கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சிவகங்கை: கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில்தான் கீழடியில் அகழாய்வு தொடங்கியது. கீழடி அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டியது அதிமுக ஆட்சியில்தான். தமிழ்நாட்டில் 39 அகழாய்வில் 33 அகழாய்வு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.