காரைக்குடி: காரைக்குடியில் பிரபல கஞ்சா வியாபாரி மனோஜ் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். காரைக்குடி 100 அடி சாலையில் வைத்து ரவுடி மனோஜை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றுள்ளது. நிபந்தனை ஜாமீனில் உள்ள ரவுடி மனோஜ் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது வெட்டிக் கொலை செய்துள்ளனர். கஞ்சா வியாபாரியை வெட்டிக் கொன்று விட்டு தப்பிய மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்
+
Advertisement

